ஆன்லைன் மணல் விற்பனை: மணல் லாரி உரிமையாளர்கள் காேரிக்கை

அரசு நடத்தும் ஆன்லைன் மணல் விற்பனையை தடை செய்யக் காேரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் காேரிக்கை.

Update: 2021-08-10 09:30 GMT

காஞ்சிபுரம் தனியார் ஹாேட்டலில் நடந்த விழாவில், புதியதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது.

காஞ்சிபுரம் தனியார் ஹாேட்டலில் நடந்த விழாவில், புதியதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு 27 மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளால் துவங்கப்பட்டது.

இதில் மாநில தலைவராக காஞ்சிபுரம் தீனன் தேர்வு செய்யப்பட்டார். இவருடன் 15 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு நடத்தும் ஆன்லைன் மணல் விற்பனையை தடை செய்ய வேண்டும் எனவும், இதனால் லாரி உரிமையாளர்களுக்கு மாதம் ஒருமுறை மட்டுமே தொழில் நடைபெறுகிறது. ஆகவே லாரி உரிமையாளர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் மணல் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அதேபோல் எம்சாண்ட் விற்பனையை லாரி உரிமையாளர்களுக்கு தான் வழங்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல் என லாரி மீது போடப்படும் பொய் வழக்குகளை காவல்துறை தவிர்க்க வேண்டும் என்றும் வருங்காலங்களில் லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டது.

இதில் தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News