தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் பங்கேற்ற நூறு பேருக்கு பணிவாய்ப்பு

வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டுதல் துறை சார்பாக வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என துணை இயக்குனர் தகவல்

Update: 2022-04-22 12:00 GMT

தனியார் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில்  நடைபெற்ற நேர்காணில் பங்கேற்ற இளைஞர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்டோருக்கு தனியார் நிறுவனங்கள் பணி நியமனம் வழங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிக்காட்டுதல் அலுவலகத்தில் ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த வேலைவாப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்கள் - இளம் பெண்களுக்கு மொபைல் போன் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டன.

இன்று நடந்த இந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்தார்.ஸ்ரீராம் சீட், கே.ஐ.எம்.எல்., டி.வி.எஸ்., இன்சூரன்ஸ், தர்தாக் உள்ளிட்ட 16 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதி உள்ள இளைஞர்கள் - இளம் பெண்களை தேர்வு செய்தனர்.

இவர்களது கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் உடனுக்குடன் சரி பார்க்கப்பட்டு,  மாலையிலேயே பணி நியமன உத்தரவும் வழங்கப்பட்டன.இன்று மட்டும் 240 இளைஞர்கள் - இளம் பெண்கள் இந்த வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 116 பேருக்கு தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பணி நியமன உத்தரவும் வழங்கப்பட்டன.


Tags:    

Similar News