காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் அமாவாசை பூஜைக்கு தடை

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சோமவார அமாவாசை பூஜை செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 04:15 GMT

கோயில் வாசல் முன்பு வண்ணப் பொடிகளால் கோலமிட்டு பால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து அமாவாசையை பூஜை செய்த பெண்கள்.

திங்கட்கிழமைளில் வரும் அமாவாசை தினத்தை சோமவார அமாவாசை ‌‌‌‌என அழைக்கபடுகிறது. இதுமட்டுமில்லாமல் திங்கட்கிழமை சந்திரன் ஆதிக்கம் கொள்ளுவதால் அந்நாளில் தீபமேற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

மேலும் இந்த நாளில் அரசமரம் வலம் வருவது உடலுக்கு நன்மை பயக்கும் மற்றும் மங்கல நிகழ்வுகள் நிகழும் என்பதால்  அதிகாலையில் குறிப்பாக பெண்கள் அரச மரத்தை வலம் வருவர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் ஆலயத்தில் திருக்குளம் அருகே அரசமரத்தின் கீழ் சப்த கன்னிகள் அமைந்துள்ளது.

சோமவார அமாவாசை தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்களை தவிர்க கோயில் நடை சாத்தப்படுகிறது.

அவ்வகையில் இன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில் சோமவார அமாவாசை விழா கொண்டாடவும்,  பொதுமக்கள் தரிசனத்திற்கு தடைவதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள் கோயில் வாசல் முன்பு வண்ணப் பொடிகளால் கோலமிட்டு பால் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்து அமாவாசையை பூஜை செய்து  வழிபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News