பிரம்மோற்சவத்தை ஒட்டி மாநகராட்சி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிறது.

Update: 2023-02-21 08:00 GMT

திருக்கோயில் வளாகத்தை ஒட்டி ஆக்கிரமிப்பில் இருக்கும் கடைகளை மாநகராட்சி அகற்றிய போது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் பிரம்மோற்சவம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் , சன்னிதி தெருவில் உள்ள சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி  போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.

சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இதில் கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அதிக அளவில் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன. கோவிலை சுற்றியுள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது.

வரும் 24ஆம் தேதி அன்று காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் தரிசிக்க வருவதால் பக்தர்கள் அவதியைப்போக்க நடைவதிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, மாநகராட்சி,  காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.

அதனால் சன்னிதி தெரு சாலையோர கடைக்காரர்களிடம் ஏற்கனவே கடைகளை அகற்றம் குறித்து தெரிவித்துவிட்டோம். அதனை தொடர்ந்து இன்று சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதை கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் உடன் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பின் போது எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தரிசனம் செய்யவந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதனையும் முன்றிலமாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவை பற்றி பந்தல் அமைக்கும் பணி மற்றும் திருக்கோயில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் காஞ்சி காமாட்சி அம்மன் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனால் திருக்கோயில் வளாகம் முழுவதும் இருசக்கர வாகனம் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இப்பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News