காஞ்சிபுரம்‌ ஒன்றிய தலைவர் பதவி: மலர்கொடிகுமார் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த திருமதி. மலர்கொடிகுமார் ஓன்றிய பெருந்தலைவராகும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது

Update: 2021-10-21 09:30 GMT

காஞ்சிபுரம் ஒன்றிய பெருந் தலைவராகும் வாய்ப்புள்ள திருமதி மலர்கொடிகுமார்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஓன்றியக் குழு உறுப்பினர்களாக 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திமுக 13 பேரும் , அதிமுகவை சேர்ந்த இருவரும் , பாமக, பாஜாக , விசிகவை சேர்ந்த தலா ஓருவர் என தேர்வு செய்யபட்டனர்.

இந்நிலையில் நேற்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில் திமுக சார்பாக ஓன்றியத்தலைவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ள நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளரும் , முன்னாள் காஞ்சிபுரம் ஒன்றிய தலைவருமான பி.எம்.குமார் அவர்களின் மனைவியுமான மலர்கொடிகுமார் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நேற்றே மூத்த உறுப்பினர் எனும் முறையில் அனைவருக்கும் பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுக்க வைத்தபோது உறுதியான நிலை உருவானது. இருந்தாலும் திமுகவின் கொள்கைப்படி கூட்டத்தில் மட்டுமே தேர்வாகும் என்பதால் ஒருமித்த கருத்து அவருக்கு சாதகமாகவே உள்ளது. துணைத் தலைவருக்கு சிலர் போட்டியிடவுள்ள நிலையில் மாவட்ட செயலாளரின் அறிவிப்பு காத்திருக்கும் நிலை உள்ளது.

Tags:    

Similar News