மோசடியாக வங்கியிலிருந்து பணம் எடுப்பு : காஞ்சிபுரம் சைபர்கிரைம் தனிபோன்

வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுக்கபட்டிருந்தால் காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல் எண்ணில் அழைக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

Update: 2021-08-13 14:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகம்.

பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு குறிப்பாக கிராமப்புற பொதுமக்கள், ஓய்வுபெற்றவர்களை  அடையாளம் காணாத நபர் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு வந்த ஓடிபி நம்பர் கூறுமாறு கேட்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது..

இதை  தவிர்க்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் பிரிவினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்  பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடையாமல் கீழ்கண்ட எண்ணான📞155260 அழைத்து புகார் தெரிவித்தால் மோசடி நபர்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காத வகையில் ஃப்ரீஸ் செய்து கொடுக்கப்படும் எனவும்,  இது 24 மணி நேரத்துக்குள் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும்  சைபர் குற்றங்கள் தொடர்பாக  நேரில் வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News