காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர்.

Update: 2022-02-28 05:45 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,  அதற்கென விதிக்கபட்ட நன்னடத்தை விதிகள் திரும்ப பெறுவதாக,  தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கம்போல் திங்கட்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்தார்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில்,  பொதுமக்கள் தங்கள் குறித்த மனுக்களை அளிக்க நீண்ட வரிசையில் நின்று,  பதிவு பெற்று,  மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து வருகின்றனர். முன்பாக மூன்று மாற்று திறனாளிகளுக்கு  ரூ2.7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

Tags:    

Similar News