தாபா ஓட்டலில் போதையில் இலவச உணவு கேட்ட தகராறில் ஒருவருக்கு ‌‌கத்திகுத்து

Crime News in Tamil -இரவு நேரங்களில் காஞ்சிபுரம் பகுதியில் செயல்படும் ஆட்டோக்களை காவல்துறை அவ்வப்போது திடீர் ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-11-07 04:30 GMT

தனியார் ஹோட்டலில் நடைபெற்ற முதலில் கத்தி குத்து பெற்ற நபருக்கு 108 ஆம்புலன்ஸ் முதலுதவி சிகிச்சை அளித்த போது.

Crime News in Tamil -பஞ்சாபி தாபா ஹோட்டலில் மது போதையில் உணவு இலவசமாக கேட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவர், ஹோட்டல் உரிமையாளர் மீது கத்தியால் குத்த முயன்றபோது, உரிமையாளர் தப்பித்ததால் அவரது நண்பர் மீது கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை-பரமேஷ்வரி தம்பதியர்.இவர்களுக்கு மணிகண்டன், யுவராஜ், வெங்கடேசன் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களின் மூன்றாம் மகனான வெங்கடேசன்(26) ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சுமித்ரா என்பவருடன் திருமணமாகி தனியாக வசித்து வரும் இவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், அண்மையில் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் வெங்கடேசன், சக்திவேல் மற்றும் சுரேஷ் ஆகியோர் மது அருந்திவிட்டு அருகில் இருந்த பஞ்சாபி தாபா ஹோட்டலில் உணவு அருந்த சென்று அங்கு ஓட்டல் உரிமையாளரிடம் உணவு இலவசமாக தருமாறு கேட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் தர மறுக்கவே, இதில் ஹோட்டல் உரிமையாளருக்கும், ஆட்டோ நண்பர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் சக்திவேல் கத்தி எடுத்து தாபா ஹோட்டல் உரிமையாளர் லோகநாதனை குத்த முயன்ற போது அவர் லாவகமாக தப்பித்தார். ஆனால் சுரேஷ் என்பவர் கத்தியை எடுத்து குத்த முயன்றபோது, அவர் பின்னால் இருந்த வெங்கடேசன் மீது அந்த கத்திகுத்து விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

இதனையெடுத்து அப்பகுதியில் இருந்த வெங்கடேசனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சகிச்சைக்காக செங்கல்பட்டு‌ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு‌ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இன்று காலை அங்கிருந்து மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வெங்கடேசனை கத்தியால் குத்திய சுரேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஓட்டுநர் சக்திவேலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சுரேஷ் மற்றும் சக்திவேல் ஆகியோர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் ஆட்டோ ஓட்டுனர் என்ற போர்வையில் இவர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் சுற்றித்திரியும் ஆட்டோக்களை காவல்துறையினர் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

இது போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News