முட்டவாக்கம் ஸ்ரீ பணையாத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலகலம்

பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்த கிராம தேவதை கோயிலில் பல லட்சம் மதிப்பில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

Update: 2023-03-09 12:00 GMT

கிராம தேவதை திருக்கோவிலான ஸ்ரீ பனையாத்தம்மன் கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியார்கள் 

காஞ்சிபுரம் அடுத்த முட்டவாக்கம் கிராமத்தில் கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பணையாத்தம்மன் ஆலயத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற மஹா கும்பாபிசேகம் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

அவ்வகையில் ,  காஞ்சிபுரம் அடுத்த பாலு செட்டி சத்திரம் அருகே உள்ள முட்டவாக்கம் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பனையாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல ஆண்டுகளுக்காக சிதலமடைந்த கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு எடுத்து அதற்கான பணிகளை கடந்து சில மாதங்களுக்கு முன்பு துவைக்கினர்.புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.



கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு இரு நாட்களுக்கு முன் கணபதி ஓமத்துடன் பூஜை துவங்கி, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி என நான்கு வேளை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.யாகசாலை பூஜைகள் நடைபெற்று இறுதியை எட்டிய நிலையில் இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது.

அதன் பின் யாகசாலையில் இருந்து புனித நீர்க்குடங்கள் புறப்பட்டு திருக்கோயிலை வலம் வந்து ராஜ கோபுரம், விமானங் களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதன் பின்  மூலவரான அருள்மிகு ஸ்ரீ பனையாத்தம்மன் சாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாவைக்க்காண பாலுசெட்டி, முட்டவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீது தெளித்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் , திமுக பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட பிரதிநிதி மனோகரன், ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News