காஞ்சிபுரத்தில் காவல்துறை அலட்சியம்; பர்தா உடையில் நகை, பணம் கொள்ளை

காஞ்சிபுரத்தில் பர்தா உடை அணிந்து நூதன முறையில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்றது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-20 10:00 GMT

பூட்டி வைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்.

காஞ்சிபுரத்தில் திருமண முகூர்த்த தினைத்தியொட்டி, இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல கூடியிருந்த மக்களை கட்டுபடுத்த போதுமான காவலர்கள் இல்லை. இதனை சாதமாக்கிய திருடர்கள் தங்கள் முகங்களை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த உடையில் இருப்பவர்களை திடீரென யாரும் சந்தேகித்து விசாரணை நடத்த முடியாது. மேலும் இவர்கள் ஆண்களா அல்லது பெண்களா என தெரியாது . சந்தேகம் கொண்டு உடை அகற்ற கூறினால் மதம் சார்ந்த அடிப்படையில் பிரச்சினைகள் உருவாகும் . இதை கருத்தில் கொண்டே இந்த நூதன முறையினை கையாளுகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்  தனது உறவினர் திருமணத்திற்கு வந்தவர்  பிற்பகல் ஒரு மணியளவில் பேருந்தில் ஏற முற்பட்டபோது, பின்னால் வந்த பர்தா நபர் இவர்மீது இடித்தபடியே சென்றுள்ளார். 

பேருந்தில் அமர்ந்து பையை பார்த்தபோது தனது பைக்குள் வைத்திருந்த 4சவரன் நகை மற்றும் ரூ25ஆயிரம் காணமல் போனது தெரியவந்தது.

இது குறித்து புகார் தெரிவிக்க காவல் பூத் சென்று பார்த்தபோது காவலர்கள் யாரும் இல்லாததும், பூத் பல மாதங்களாக பூட்டி தான் உள்ளதாக கூறி சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காவல் கட்டுபாட்டு அறை திறப்பதில்லை; காவலர்கள் ரோந்து இல்லை; பல‌ ஆயிரக்கணக்கான மக்களை கண்காணிக்க சிசிடிவி கேமராவும் இல்லை என அனைத்தும் திருடர்களுக்கு சாதகமாவே அமைந்துள்ளது.

வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க காவல்துறை உரிய காவலர்களை பணியமர்த்தி ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News