கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநில மாவட்ட பக்தர்கள் வருகை குறைந்ததால் காஞ்சிபுரம் திருக்கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2021-04-21 06:15 GMT

தமிழகத்தில் கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் நகரமாம் காஞ்சிபுரம் நகருக்கு நாள்தோறும் வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட பக்தர்கள், அதிகாலை 6 மணிமுதல் அதிக அளவில் சாமி தரிசனம் மேற்கொள்வர். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் இவர்களின் வருகை 95% குறைந்துள்ளது

உள்ளூர் பக்தர்கள் மாலை மட்டுமே குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வார்கள். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற  காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் குமரகோட்டம் முருகன் ஆலயம் என பல ஆலயங்களில் காலை 8 மணிக்கு பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் இக்கோயிலை சுற்றி உள்ள வியாபாரிகள் வெளி மாநில ,  மாவட்ட பக்தர்கள் வரவு தற்போது முற்றிலும் குறைந்ததால் வாழ்வாதாரம் இழந்து விட்டதாக பெரிதும் வருத்தத்துடன் கூறுகின்றனர்

Tags:    

Similar News