வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உண்டியல் வசூல் ரூ. 5.97 லட்சம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக 5லட்சத்து ரூ.97ஆயிரம் கிடைத்தது.

Update: 2021-05-07 09:00 GMT

காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற ஐதீகம் உள்ளது.

இதனால் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச்  செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் இன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.5,97,139 கிடைத்தது. அப்போது ஆலய எழுத்தர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News