காஞ்சிபுரம் : வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த சிலிண்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் பாவாஜி தெருவில் வீட்டில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான சிலிண்டர்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-12-23 14:00 GMT

காஞ்சிபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பாவாஜிதெரு பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கேஸ் சிலிண்டர்கள் குடோன் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் நகராட்சிக்கு மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலையில் இந்த குடோன் அமைந்துள்ளது.

எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களால் பேரிடர் அபாயம் ஏற்படக்கூடும் என்கின்ற அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து இருந்தனர்.

காஸ் சிலிண்டர் குடோனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மாவட்ட நிர்வாகமும், மாவட்ட தீயணைப்புத் துறையும் இந்த குடோனுக்கு எப்படி அனுமதி அளித்தது என வியப்பாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் நலன் கருதி இங்கு அமைக்கப்பட்டுள்ள குடோனை குடியிருப்புகள் இல்லாத வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து திடீர் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஓட்டு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட எரிவாயு நிரம்பிய சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

குடியிருப்பு பகுதியில் ஒரு ஓட்டு வீட்டுக்குள் ரசீதும் யாருடைய அனுமதியும் இல்லாமல் எவ்வாறு வந்தது அதிகாரிகள் திகைத்துப் போனார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Tags:    

Similar News