காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2024-03-21 10:17 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்.

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது, முதல் கட்டமாக ஏப்ரல் ௧௯ம் தேதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவுகள் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அதற்கான தேர்தல் அட்டவணைகளையும் வெளியிட்டார்.

  • தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் ஏற்கனவே தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்தும் தொகுதி பங்கீடுகளையும் நிறைவு செய்து வருகிறது.
  • இந்நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்திருக்கும் நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
  • அவ்வகையில் அதிமுக சார்பில் நேற்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை  வெளியிட்டார். அதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவர் அறிவிக்கப்பட்டார்.
  • பெரும்பாக்கம் ராஜசேகர் எம்ஏ பட்டதாரியும்,  தற்போது அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராகவும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
  • கடந்த 40 ஆண்டு காலமாக இவரது குடும்பம் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாக்கம் ஊராட்சியை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆரம்ப நிலையில் கிளைச் செயலாளராக தனது பணியை தொடங்கி உள்ளாட்சி மற்றும் அரசியல் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை கடந்த தேர்தலில் இழந்த நிலையில் தற்போது மீண்டும் தங்களது வசம் கொண்டு வர அதிமுகவினர் முயன்று வருகின்றனர். அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News