காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம்

அனைத்து வகை வகுப்புகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் துவக்கம். முதல் பாட பருவ புத்தகங்கள் வழங்கல்.

Update: 2022-06-13 05:45 GMT

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி முதல் பருவ பாடபுத்தகம் வழங்கியபோது.

தமிழத்தில் இன்று அனைத்து வகை பள்ளி வகுப்புகளும் காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதலே பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து வந்தனர். பள்ளிகளில் அரசு வழிகாட்டுதலுடன் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு பள்ளி காலை தேசிய கொடியேற்றத்துடன் துவங்கியது. இறை வணக்கம், திருக்குறள், தலைமையாசிரியர் அறிவுரையுடன் பின் வகுப்புகள் துவங்கியது. பள்ளி முதல் மாணவர்களுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை சிரமத்துடன் கடந்து வந்த நிலையில், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு உள்ளிட்ட சுமைகள் கூடுதலாக அதைத் தொடர்ந்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் கொண்டுள்ளனர். அவ்வகையில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று பள்ளி சேர்க்கையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News