காஞ்சிபுரம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை காஞ்சிபுரம் வணிகர் வீதியில் விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-01 14:45 GMT

காஞ்சிபுரத்தில் லாட்டரி சீட் விற்பனை செய்தவர் கைது.

ஏழை எளிய மக்களின் பணத்தை லாட்டரி சீட்டு மூலம் இழந்து வறுமையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வணிகர் வீதியில் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல தரப்பினரிடையே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சிவக்குமார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார் அப்போது ராஜ்குமார் கூலித்தொழிலாளிகள் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து தடைசெய்யப்பட்ட லாட்டரி விறறதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News