காஞ்சிபுரம்: பாலாற்றில் மணல் திருட்டு; 3பேர் கைது- மினி லாரி பறிமுதல்

காஞ்சிபுரம் புள்ளலூர் கிராம பாலாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-15 12:28 GMT

திருட்டுத்தனமாக மணல் அள்ளிதாக பறிமுதல் செய்யப்பட்ட மினிலாரி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆற்று படுகைகளில் மணல் அள்ள பொதுமக்களுக்கு கடந்து 6 ஆண்டுகளாக தடை விதிக்கபட்டுள்ளது.

தடையை மீறும் நபர்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தும் வாகனம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், தொடர் விதிமீறலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் புள்ளலூர் பாலாற்று படுகையில் ஆற்றுமணல் திருட்டு நடைபெறுவதாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான காவலர்கள், ஆய்வு மேற்கொண்ட போது, மணல் எடுக்க ஆற்றுப்படுகையில் இருந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மணல் திருட்டில் ஈடுபட்ட தினகரன்,  நவீன் ராஜ் ,  தணிகைவேல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது அரசு அனுமதியின்றி ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News