ரெம்டெசீவிர் மருந்து ஓதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரெம்டெசீவிர் மருந்து கூடுதலாக ஓதுக்கீடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை

Update: 2021-05-08 06:45 GMT

ரெம்டெசிவிர் மருந்து (மாதிரி படம்) 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஓரே நாளில் 836 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 3399 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.  குறிப்பாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை,  கூடுதல் மருத்துவர்கள் நியமனம், மருந்துகள் பற்றாக்குறை என பல குறைகளை மாவட்ட நிர்வாகிகளிடம் மருத்துவமனை நிர்வாகிகள் முறையாக தெரிவிப்பதில்லை.

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் முறையிட்டபோது, மருத்துவமனை நிர்வாகிகள் பதிலேதும் கூறாமல் மௌனமாக நின்றனர்.

மேலும் ரெம்டிசிவர் மருந்துக்கான ஒதிக்கீடு குறைந்த அளவே வருவதாகவும்,  வாரத்திற்கு 600 தேவைப்படும் நிலையில் 60 மட்டுமே மருத்துவமனைக்கு கிடைக்கப் பெறுவதாக மருத்துவமனை நிர்வாகி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதிக ஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொண்டார்

இவ்வளவு நாளாக இம்மருந்து ஓதுக்கீடு குறித்து எந்த தகவலையும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், ஆக்ஸீஜன் பற்றி மட்டுமே தகவல் அளித்துள்ளனர். இம்மருந்தை நோயாளியை வாங்கி வர பரிந்துரைப்பது ஏன்  எள  செய்தியாளர்கள் கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்தது. 

Tags:    

Similar News