காஞ்சிபுரம் : திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மாவட்ட கருவூலம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில், ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றும் கருவூலம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

Update: 2022-01-09 12:30 GMT

பயன்பாட்டிற்கு வராத காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம்.

காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அழகு கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்ட அலகின் கீழ் நான்கு சார் கருவூலங்கள் இயங்கி வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் 13 ஆயிரம் பேரும்,  ஓய்வூதியர்கள் 9500 நபர்களும், பணம் பெரும் அலுவலர்களாக 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர்.

இதற்கான அலுவலக கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் இயங்கி வந்தது. அனைவருக்கும் சற்று இட நெருக்கடியை தந்ததால் புதிய கட்டிடம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அவ்வகையில்  ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 25ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் கருவூல அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில், க.சுந்தர் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா கண்டு பல மாதங்களாகியும் தற்போது வரை கருவூல அலுவலகம் இட மாற்றம் செய்யப்படாமல் பூட்டப்பட்டே உள்ளது. மேலும் பழைய அலுவலகம் இடம் மாறினால் பல்வேறு சிறிய அலுவலகங்கள் வாடகையில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வருவது இங்கு வர வாய்ப்பாக அமையும்.

மேலும் புதிய அலுவலகக் கட்டிடத்தில் அதிக அளவு இடம் இருப்பதால் மேலும் சிறிய அலுவலகங்கள்  அமைக்கும் அளவுக்கு வாய்ப்பு தர இயலும் என்பதால் உடனடியாக இக்கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News