காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சேவை மைய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா ?

காஞ்சிபுரம் மாவட்டம் மாறகல் ஊராட்சியில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

Update: 2021-07-17 12:30 GMT

பயனற்ற நிலையில் இருக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

தமிழக அரசின் சான்றுகள், நலத்திட்ட உதவிகள்  பெற  தற்போது இணையம் வழியாக மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும் எனும் நிபந்தனை உள்ளது. 

இந்நிலையில் கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை ஓரே இடத்தில் பெற  இ சேவை மைய கட்டிடங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

ஆனால் கட்டப்பட்ட இடங்களோ கிராமத்தினை தாண்டி உள்ள பகுதிகளில் தான்.பொதுமக்கள் பயண்படுத்தாத இடங்களில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றளவில் யாருக்கும் பயன்பாட்டிற்கு இல்லாமல் சமூக வீரோத கூடமாகவும், பழைய பொருட்களை போடும் குடோனாகவுமே பயன்படுகிறது.

இதனால் அரசு பணம் பெருமளவில் இழப்பாகியுள்ளது. பல்வேறு திட்டங்களை முறையான இடம் தேர்வு செய்யாமல்  அரசு அதிகாரிகள் இதுபோன்று கட்டிடங்கள் கட்டி வீணாக்குவதை நிறுத்துவார்களா ? 

Tags:    

Similar News