காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவில் 9ம் நாள் உற்சவம்: ஆள் மேல் பள்ளக்கில் பவனி

ஸ்ரீ தேவராஜ சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் இன்று காலை ஆள் மேல் பல்லக்கும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

Update: 2022-05-21 04:45 GMT

ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் ஆள் மேல் பள்ளத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வரதர்.

வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களை சூடி ஸ்ரீதேவி பூதேவியுடன் காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் திருத்தேர் விழாக்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

இன்று 9ம் நாள் காலை ஆல் மேல் பள்ளக்கில் எழுந்தருளி திருக்கச்சி நம்பி தெரு தேரடி காமராஜர் வீதி மற்றும் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சங்கர மடம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ தேவராஜ சுவாமி ஏர்செல் நடைபெற்று போர்வை கலைதல் நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருக்கோயிலுக்கு திரும்பிய வரதர் 11 மணியளவில் திருக்குளத்தில் நடைபெற உள்ளது. இரவு 10 மணிக்கு புண்ணியகோடி விமானத்தில் ஸ்ரீ தேவராஜ ஸ்வாமி மூதேவி ஸ்ரீதேவி உடன் எழுந்தளி ராஜ வீதிகளில் வலம் வருவார்.

Tags:    

Similar News