காஞ்சிபுரம்: 10 நாட்களில் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 10 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 155 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-03-16 17:02 GMT

தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் துவங்கியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் முதல்கட்டமாக பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் காஞ்சிபுரம் காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெருவில் இயங்கும் சூப்பர் மார்கெட் நிறுவனங்கள், மளிகை கடைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கடந்த 15 தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 155 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிதல் கை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வாடிக்கையாளர்களை கட்டாயம் முககவசம் அணிய நிறுவனங்கள் கூறவேண்டும், அவ்வாறு செயல்படாத நிறுவனங்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதமும், முககவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் இதுவரை முகம் கவசம் அணியாத நபர்களிடம் இருந்தும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிறுவனங்கள் உள்ளிட்டவை யிலிருந்து அபராதமாக ரூபாய் 25 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News