காஞ்சிபுரம் சரகம் 84 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 10 வருடம் பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-02 09:30 GMT

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்தியபிரியா

காஞ்சிபுரம் சரக காவல் துறையின் கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய காவல் மாவட்டங்கள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பணிகளை இருபத்தி நான்கு மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் காவல் சரகத்தில்  காஞ்சிபுரத்தில் 30 தலைமை காவலர்களும் செங்கல்பட்டில் 32 தலைமை காவலர்களும் திருவள்ளூரில் 31 காவலர்கள் என 93 காவல்துறையினர் கடந்த 25 வருடங்களாக காவல்துறையிலும், கடந்த பத்தாண்டுகளாக தலைமை காவலர் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டது.

அவ்வகையில் இதில் எந்த ஒரு புகாரும் இன்றி செயல்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இருபத்தி ஒன்பது தலைமை காவலர்களும்,  செங்கல்பட்டில் 28 தலைமை காவலர்களும் , திருவள்ளூரில் இருபத்தி ஏழு தலைமை காவலர்களும் என 84 தலைமைகளுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.

விடுபட்ட 9 தலைமை காவலர்களின் பதவி உயர்வு புகார் நிறைவு பெற்றதும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News