காஞ்சி சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு 50 ஆவி பிடிக்கும் கருவிகள்

காஞ்சிபுரம் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு 50 ஆவி பிடிக்கும் கருவிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-05-29 13:00 GMT

காஞ்சிபுரம் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு 50 ஆவி பிடிக்கும் கருவிகளை எம்.எல்.ஏ. எழிலரசன் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு இம்மாதம் 17 ம் தேதி தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனால் திறந்து வைக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் இம்மையத்தில் 187 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 86 பேர் சித்த மருத்துவப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி பிடிக்கும் கருவி இல்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் 50 ஆவி பிடிக்கும் கருவிகளை சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு வழங்கினார். இதனை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாச்சாமி, சித்த மருத்துவர்கள் முத்துக்குமார், பார்வதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதில், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஆர்.கல்பனா, வெற்றி ஐ.ஏ.எஸ்.அகாடமி இயக்குநர் ரூசோ ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News