காஞ்சிபுரம்: 11,149 நபர்களுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பயிர்க் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

Update: 2022-03-23 09:45 GMT

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை,  விற்பனைக்காக உலர வைத்துள்ள களம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  மத்திய கூட்டுறவு வங்கி 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்,  2 நகர கூட்டுறவு வங்கிகள்,  மூன்று தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்,  29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 93 சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இதன் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்கள்,  விதை,  உரங்கள்,  இடுபொருட்கள் வினியோகம் செய்வதுடன் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கி உணவு உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் கிராமங்கள் தோறும் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயனடையும் வகையில் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,  மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு, 70 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு,  தற்போது வரை 11 ஆயிரத்து 149 விவசாயிகளுக்கு, ரூபாய் 67.20 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News