நியாய விலை கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம்

Total Body Checkup - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 626 கடைகளில் பணிபுரியும் 380 விற்பனையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை ஆகஸ்ட் 3 வரை நடக்கிறது

Update: 2022-07-23 05:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலைக் கடை ஊழியர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்த இணைப்பதிவாளர் லட்சுமி மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு.

Total Body Checkup -தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி புரியும் நியாய விலை கடை விற்பனையாளருக்கான சிறப்பு முழு உடல் சிறப்பு பரிசோதனை முகாம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையில் காலை தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 626 நியாய விலை கடைகளில் 380 விற்பனையாளர்கள் ஐந்து தாலுகாக்களை பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் ஐந்து விற்பனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாள்தோறும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை, இசிஜி, சர்க்கரை பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் தேவைப்படின் இருதய சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமினை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் எஸ். லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, கூட்டுறவு துறை அலுவலர்  மணி , சத்யநாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாம் இன்று துவங்கி வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News