காஞ்சிபுரத்தில் கனமழை, விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-07-08 14:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மண்டலம் அறிவித்தது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காலை முதலே கடும் வெப்பம் சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் மாலை 7 மணி முதல் பலத்த காற்று வீச துவங்கி சிறிது நேரத்திலேயே மெல்ல மழை பெய்யத் துவங்கியது.

சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என பல இடங்களில் பெய்ய தொடங்கியது.

கனமழையால் சென்னை -  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் கனமழை காரணமாக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் இல்லாத நிலை உருவாகியது.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகள் துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News