காஞ்சிபுரம் செல்ல விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரத்தில் அருள்மிகு செல்ல விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-06-17 11:00 GMT

அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மூலவர் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட போது.

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம்,  நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தடைகள் நீக்கும் பிராத்தனை தலமாக விளங்கும் செல்வ விநாயகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று காஞ்சிபுரத்தில் முதன்முறையாக கடந்த பலநூறு வருடங்களாக இல்லாத வகையில் கருங்கலிலான கருவறை, இரண்டு ஸ்தல விமானங்கள், மகா மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமையன்று கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையுடன் துவங்கி நான்கு கால பூஜைகள் நடைபெற்று இன்று காலை மகா கும்பாபிஷகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவச்சார்யர்களின் வேத மந்திரம் முழங்க யாகசாலையிலிருந்து புனித நீரை சிவச்சார்யர்களால் வேத மந்திரம் முழங்க கொண்டுவரப்பட்டு,  மூலவர் கருங்கல் கோபுர விமான கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. அதனைதொடர்ந்து மூலவர் செல்வ விநாயகருக்கும் நவகிரக மூர்த்திகள், சயமக்குரவர்கள், உற்சவர் ஆகிய திருமூர்த்திகளுக்கும் புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகத்தினை காண வந்த பக்தர்களின் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இக்கும்பாபிஷேக விழாவில் பிள்ளையார் பாளையம் சுற்று வட்டார பொதுமக்கள், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதி மக்கள் என நூற்றுக்கணகான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கும்பாபிஷேக விழாவையொட்டி அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News