கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி.

Update: 2021-10-25 10:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி வழங்கினார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகையே ஆட்டிப் படைத்தது. தமிழகத்தையை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதில், பெற்றோரை இழந்து, தனிமைப் படுத்தபட்டு வாழ்வாதாரம் கேள்வியாகியுள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடத்தில் இதற்கான விழா இன்று நடந்தது. ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமைத் தாங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் 62 பேருக்கு, தலா ரூ.6 லட்சத்தை நிதியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் இந்த நிதியுதவி ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம் அவர்களது கல்வி மற்றும் வாழ்வாதாரம் நிலை நிறுத்த பெரிதும் உதவும் எனவும், இதை உதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும்‌ தடுப்பூசி எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்நிழ்ச்சியில் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீ தேவி, எம்.பி., செல்வம், எம்.எல்.ஏ.,கள் சுந்தர், சி.வி.எம்.பி., எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம். குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News