ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் : உற்பத்தியாளர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்றுமதி பங்குதாரர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் ‌‌அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-07-22 08:00 GMT

  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி பங்குதாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்தியன் , ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜிதாமஸ்வைத்தியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக கூடுதல் இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் ஏற்றுமதி மையம் குறித்த திட்ட விளக்கம் அளித்தார். இக்கூட்டத்தில் தொழில் ஆணையர் சுஜி தாமஸ் வைத்தியன் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் அரசு திட்டங்களையும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் , கடந்த 18 மாதங்களாக தமிழக அரசு ஏற்றுமதியாளர்களுக்கும் , தொழில் சார்ந்த செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

இதில் பங்கேற்ற ஏற்றுமதியாளர் பேசியதாவது:   மாவட்டத்தில் ஏற்றுமதி குறித்து ஆலோசனை வழங்கவும், அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். ஏற்றுமதி குறித்து எந்த ஒரு அடிப்படை கருத்துக்களும் தெரியாது நிலையில் இடைத்தரகர்கள் மூலமே ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை இங்கு உருவாகுவதால் இம்மையம் பெரிதும் உதவும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகனங்கள் உதிரி பாகம் தயாரிப்பாளர் சங்கத்தினர்,  திருமுடிவாக்கம்  தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் ,  சிப்காட் இருங்காட்டுகோட்டை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் , காஞ்சிபுரம் பட்டு பூங்கா நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டடனர்.மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன் , க.சுந்தர் , மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட தொழில் மைய உதவ இயக்குனர் சுபாஷ்  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News