தேர்தல் நடத்தை விதிகளை மீறி பறந்த கட்சி கொடிகள் அகற்றம்

தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பல்வேறு பகுதியில் பறக்க விடப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடியினை பறக்கும் படை அகற்றினர்.

Update: 2022-02-14 03:30 GMT

பல்லவர் மேடு பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்டப்பட்ட அரசியல் கட்சி கொடிகளை பறக்கும் படையினர் அகற்றிய போது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி இரண்டு நகராட்சியில் 3 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் மாவட்டம் முழுதும் அமலில் உள்ளது. இதனை  மீறுபவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் பல்லவர் மேடு பகுதியில் பல்வேறு குடியிருப்பு மற்றும் கட்சி அலுவலகங்களில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி அரசியல் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் எழுந்த நிலையில் அவ்வழியாக வந்த பறக்கும் படையினர் இதனைக் கண்டு அங்குள்ள நபரிடம் கூறி அதனை அகற்றுமாறு கூறினர்.

பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் முன்னிலையிலேயே கட்சி கொடிகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News