கழிவுகள் கொட்டுவதால் சீரழியும் பாலாறு

Update: 2021-04-04 04:15 GMT

காஞ்சிபுரம் பாலாற்றில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் பாலாறு சீரழிந்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு‌, செய்யாறு மற்றும் வேகவதி என மூன்று ஆறுகள் உள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை தற்போது வரை பூர்த்தி செய்து வருவது மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் குடிநீர் தேவையை தீர்வு செய்து வருகிறது .இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பாலாற்றில் இறைச்சி கழிவுகளையும் , கட்டிட கழிவுகளையும் சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர். இதனால் வருங்காலங்களில் நோய்த்தொற்று , குடிநீர் பஞ்சம் உள்ளிட்டவைகள் நிகழும் என விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News