ஐயங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் கலைப்பு, திமுகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தி

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கக் குழுவை திமுகவினர் கலைத்தனர் இதனால் திமுகவினர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Update: 2021-07-08 06:45 GMT

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து  பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பல ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழகம்  பள்ளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி தொடர்ச்சியாக நல்ல தேர்ச்சி சதவீதத்தை அளித்து வருகிறது.


கடந்த ஆண்டுகளில் செயல்பட்டு வந்த பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவில் அனைத்து தரப்பினரும் இடம்பெற்று இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் கடந்த 23ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்க குழுவினை திமுகவை கலைத்தனர் .

அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் துணையுடன் திமுக கட்சியை சேர்ந்த 20 நபர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பது அனைத்து தரப்பு பெற்றோர்களையும் இணைத்து கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் நிலையில் இதுவரை எந்த ஒரு உத்தரவும் இல்லாத நிலையில் தன்னிச்சையாக திமுகவினர்  செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Tags:    

Similar News