திமுக தேர்தல் அறிக்கை.. காஞ்சிக்கு பல திட்டங்கள்

2021 சட்டமன்ற திமுக தேர்தல் அறிக்கையில் காஞ்சிபுரத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதால் திமுகவினர் வாக்குகள் பெறுவதில் எளிது என மகிழ்ச்சியில் உள்ளனர்..

Update: 2021-03-14 02:45 GMT

தமிழக மக்களுக்கு செய்யவுள்ள திட்டங்களை  அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் காஞ்சிபுரம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்கா மீண்டும் செயல்பட நடவடிக்கை, உத்தரமேரூர், காஞ்சிபுரம் நகரில் புதிய பஸ் நிலையங்கள் புறவழி பகுதிகளில் அமைக்கப்படும். அரசு மருத்துவ  மற்றும் சட்டக்கல்லூரிகள் துவங்கப்படும்.  கீழம்பி,  திருமுகூடல் பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் புதிய காகித ஆலை துவங்கப்படும். வையாவூர் கூட்டுறவு நூற்பாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட உறுதிமொழியை திமுக  தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

தேர்தல்அறிக்கை தயாரிப்பு குழுவிடம் கடந்த மாதம் அளித்த அனைத்து கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கையில் உறுதி மொழியாக அளித்துள்ளதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் திமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News