தீபாவளி சிறப்பு பேருந்துகள்: காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனைக்கு சபாஷ்

சிறப்பு பண்டிகை காலங்களில் இயக்கபடும் சிறப்பு பேருந்துகளுக்கு சுங்க சாவடி கட்டண விலக்கு அளித்தால் கூடுதல் தூரம் இயக்க ஏதுவாக இருக்கும் .

Update: 2022-10-23 05:45 GMT

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்த இயக்கபட்ட சிறப்பு பேருந்தில் பயணிக்க காத்திருந்த பொதுமக்கள் 

சென்னையில் பணிபுரியும் தமிழகம் முழுவதுள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகை மற்றும் அதனையொட்டி வரும் விடுமுறை நாட்களை கொண்டாட, தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவது உண்டு.

இதற்கான ரயில் டிக்கெட்டுகள், அரசு பேருந்து , தனியார் ஆம்னி பேருந்துகள் முன்பதிவுகள் செய்து முழுவதும் முடிவடைந்த நிலையில், பேருந்துகள் மூலமாக பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய நாட்கள் விடுமுறை ஆகையால் திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நிலவி வந்தது. இருப்பினும் சென்னையில் மட்டுமில்லாமல் மற்ற ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள 3 பணிமனைகளிலிருந்து நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபட்ட நிலையில் , அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி 12 மணி வரை பயணித்தனர். இன்றும் தொடர்ந்து பல வழிதடங்களில் பண்பாட்டு தொழிற்சாலை பெண் பணியாளர்கள் பயணிக்க காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் செல்லும் வழித்தடங்களாக திருச்சிக்கு 30 பேருந்துகளும் 15 பேருந்துகளும் என நேற்று முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மீண்டும் அதிகாலை முதல் தொடர்ந்து பேருந்துகள் அதிகம் செல்லும் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் காலங்களில் சுங்கச்சாவடி கட்டணத்திற்காக குறைந்த தூரம் மட்டுமே செல்லும் நிலை உருவாகியுள்ளது. உதாரணமாக காஞ்சிபுரத்தில் சிறப்பு பேருந்துகள் திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதிலிருந்து விழுப்புரம் செல்ல வேண்டிய நிலையில் அதற்கு சுங்க சாவடி கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அதற்கு மட்டும் தோராயமாக 2000 ரூபாய் செலவாகும் என்பதால் குறிபிட்ட தூரம்‌ வரை மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது போன்ற பண்டிகை காலங்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு சுங்க சாவடி கட்டணம் விலக்கு அளித்தால் பயணிகள் தனது இடத்தை அடைய ஏதுவாக இருக்கும் என்பதால் இதை  தமிழக போக்குவரத்து துறை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பண்டிகை காலங்களில் சிறப்பு ஊழியர்களை நியமித்து தொடர் கண்காணிப்பில் பேருந்துகள் இயக்கப்படுவதும், பேருந்து நிலையம் முழுவதும் காவல்துறை சிறப்பு ஆய்வாளர்கள்,  காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராவில் காவல் பணி செய்யும் காவல்துறையினரின் நடவடிக்கையும் அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்று  வருகிறது. 

Tags:    

Similar News