2021-22 ஆம் ஆண்டிற்கான வங்கி வருடாந்திர கடன் இலக்கினை வெளியிட்ட கலெக்டர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020 - 2021ம் ஆண்டிற்கான கடன் இலக்கை கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.

Update: 2021-08-13 07:30 GMT

2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தின் நகலை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட இந்திய வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி பெற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  தலைமையில்  வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தின் நகலை வெளியிட இந்திய வங்கி மண்டல மேலாளர்  ஸ்ரீமதி பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் ரூ 2821.27 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.1260.96 கோடி விவசாயத்திற்கும்,  ரூ.856.51 கோடி சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கும் , ரூ704.40 கோடி வீட்டு வசதி கல்விக்கடன் மற்றும் இதர முன்னுரிமை கடன்களுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பி.ஸ்ரீதேவி ,  நபார்டு உதவி பொது மேலாளர்  வு.சு.விஜயலட்சுமி,  மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சந்திரசேகரராவ்,  மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் யு.சேகர், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திருமதி.மணிமேகலை,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திமு.சண்முகராஜ் மற்றும் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News