காஞ்சிபுரம் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அதிரடி ஆய்வு

காஞ்சிபுரத்தில் பள்ளிகள் திறப்பதையொட்டி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-08-25 13:15 GMT

பிள்ளையார் பாளையம் CSM பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையாசிரியர் திருவேங்கிடத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பது என முடிவு மேற்கொள்ளப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை பள்ளிகள் எடுக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட பல பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி  முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வனுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்ஆய்வில் பள்ளிகளில் உள்ள வகுப்பு அறை கழிவறை குடிநீர் தொட்டிகள் மற்றும் சுற்றுப்புற வளாகங்களை தூய்மைப்படுத்தி பணிகளையும் தேவையற்ற பொருட்கள் எதையேனும் பள்ளிகள் இருப்பின் அதை அரசு வழிகாட்டுதல் கொண்டு அப்புறபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமெனவும் இதற்கென குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் கல்வித்துறை அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News