ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்: அசத்தும் காஞ்சிபுரம் டிஐஜி குழுவினர்!

ஊரடங்கால் தவிக்கும் சாலையோர குடும்பங்களுக்கு உணவு பொருட்களை காஞ்சி காவல் துணைத்தலைவர் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

Update: 2021-05-30 04:00 GMT
டி.ஐ.ஜி. குழுவினரால், சாலையோர வாசிகளுக்கு வழங்கப்பட்ட மளிகை பொருட்கள்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

கடந்த 10ம் தேதி முதல் தளர்வுகளற்ற இருவார ஊரடங்கு அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வார ஊரடங்கு என தொடர்ச்சியாக ஊரடங்கால் வருமானம் இன்றி பல குடும்பங்கள் அல்லல்பட்டு வருகிறது.

இவர்ளுக்காக பல தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் தங்களால் இயன்ற உதவிகளையும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவரின் குழுவினர் சப்தமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறுமையில் வாடும் சாலையோர குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள்,  அவர்களது குழந்தைகளுக்கு பிஸ்கட் ,  விளையாட்டு பொருட்கள் எனவும் வழங்கி வருகிறது.

இதேபோல் சாலையோரம் தங்கள் குடும்ப ஆதரவின்றி வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கு உணவுகளை எந்தவித விளம்பரங்களும் இன்றி இக்குழுவினர் வழங்கிவரும் செயலினை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவர்கள் வழங்கிவரும் நிவாரண பொருட்கள் குறித்த புகைப்படங்கள் , வீடியோக்களை கூட வெளியிட இக்குழு ஆர்வம் காட்டுவதில்லை . கடின முயற்சிக்குப் பிறகு இந்த வீடியோக்கள் தற்போது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்கொடை அளிப்பது ஒரு கைக்கு மற்றொரு கையை தெரியக்கூடாது என கூறும் நிலையில் இவர்கள் அளிக்கும் நன்கொடைகளை கூட கூற மறுத்து வருகின்றது. இது பெரிதும் பாராட்டுக்குரிய செயலாக உள்ளது

Tags:    

Similar News