காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை முடிவு அவசியம் எஸ்.பி. எம்.சுதாகர்

காஞ்சிபுரம் காவலர் உடல் திறன் தேர்வுக்கு வரும் அனைவரும் பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவர் என காஞ்சி எஸ்பி சுதாகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-22 13:00 GMT

பைல் படம்

தமிழ்நாடு காவல் துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது.

இதில் தேர்வான காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3028 தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு வரும் திங்கட்கிழமை 26ஆம் தேதி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த உடல் திறன் தகுதித்தேர்வில் பங்கேற்க உள்ள நபர்கள் தங்களது அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்ட அழைப்பு நாட்களுக்கு 4  நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து அதன் அறிக்கையை ந கட்டாயம் தேர்வு நாளன்று எடுத்து வர வேண்டும்.

அதன் அடிப்படையில் மட்டுமே உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப் படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டினை www.tnusrbonline.org எனும் வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News