வாக்கு எண்ணிக்கை: கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்..!

-மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு.

Update: 2021-04-26 16:15 GMT

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் மே இரண்டாம் தேதி அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மின்னணு இயந்திரம் காஞ்சிபுரம் அரசு அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கையின் போது பணியாற்ற வேண்டிய அரசு அலுவலர்கள் வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி அல்லது பரிசோதனை மேற்கொண்டு அதன் சான்றிதழ்களை கட்டாயம் நுழைவு வாயில் காண்பிக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கட்டாயம் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்தந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதற்கென முகவர்கள் அரசு அலுவலர்கள் என தேவைப்படுவோர் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கட்டாயம் இவை பின்பற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News