8 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை படைத்த சகோதர சிறுவர்கள்

World record holder 8 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சகோதர சிறுவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.

Update: 2022-05-30 10:15 GMT

சாதனை செய்த சிறுவர்கள் சாதனா மற்றும் சபரீஷ் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெற்றி ரதி, அப்பகுதியிலுள்ள அங்கன்வாடியில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2ம் வகுப்பு பயிலும் சாதனா (7) என்ற மகளும், எல்.கே.ஜி பயிலும் சபரீஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த இருவருக்கும் ஓட்ட பந்தய விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதை கண்டு பெற்றோர்கள் அவர்களை ஊக்கபடுத்தியதன் காரணமாக தனியார் உலக சாதனை புத்தகத்தில் சாதனை செய்யும் நோக்கில் கடும் பயிற்சி பெற்றனர். இதனை உறுதிசெய்யும் வகையில் படப்பை-முடிச்சூர் சாலையில் குளோபல் உலக சாதனை புத்தக நடுவர்கள் முன்னிலையில் 8 கி.மீ தூரத்தினை 1மணி 25 நிமிடங்களில் ஓடி இருவரும் சாதனை‌ படைத்துள்ளனர்.

World record holder

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் பெற்றோர்களுடன் வந்து காண்பித்து வாழ்த்து பெற்றனர். இருவரையும் வாழ்த்தி மேலும் பல சாதனைகளை பெற புத்தகங்கள் பரிசாக வழங்கினார். இளம் வயதில் சகோதரி தனது இளம் வயது தம்பிக்கு ஊக்கம் அளித்து சாதனை செய்ய வைத்த நிகழ்வு அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News