கைத்தறி நெசவாளர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறையில் மூலம் உற்பத்தி செய்து பொதுமக்களை பட்டுப் புடவை என விற்பனை செய்வதாக தொடர் புகார் எழுந்து வந்தது.

Update: 2023-08-07 10:00 GMT

கைத்தறி ரகங்களை விசைத்தறி மூலம் உற்பத்தி செய்து தொழிலை நசுக்கும் நிலையை கண்டித்து குருவிமலை பகுதியில் நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினத்தில் பட்டு நெசவு க்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி , கைத்தறி ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும், விசைத்தறி சேலையை கைத்தறி பட்டு சேலை என விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டு கைத்தறி நெசவு தொழிலுக்கும், பாரம்பரியம் மிக்க பட்டுச்சேலை விற்பனைக்கும்,புகழ்பெற்று விளங்குவது காஞ்சிபுரம்.

பட்டு நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் சமீப காலங்களாக விசைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட பட்டு சேலைகளும், வெளியூர், வெளிமாநில, பட்டு சேலைகளும் தனியார் பட்டுச்சேலை விற்பனை கடைகள் மூலம் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் என விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், ஒரிஜினல் பட்டு சேலைகள் விற்பனை குறைந்து கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து மூடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய கைத்தறி தினம்,ஆகஸ்ட் ஏழாம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆன இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நிலையில் பட்டு நெசவு தொழிலுக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு கைத்தறி நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருவிமலை, களக்காட்டூர், முருகன் காலனி,கே எஸ் பி நகர், வரதராஜபுரம், தாட்டிதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கைத்தறி நெசவாளர்கள் வசித்து வரும் நிலையில் நெசவாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியினை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும், விசைத்தறி சேலைகளை கைத்தறி பட்டு சேலைகள் என்று விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பிரதமர் நெசவாளர் கடன் திட்டத்தில் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கைத்தறி நெசவு நிறுவனங்களின் தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .

இது போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கைத்தறி தினமான இன்று கைத்தறி நெசவாளர்கள் தங்கள் குடும்பங்களோடு தெருவில் நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News