அதிமுக - சசிகலா இணைப்பு விவகாரத்தில் பாஜக தலையிடாது: மாநிலத்தலைவர் அண்ணாமலை

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் விஜயேந்திரருடன் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று தரிசனம் செய்தார.

Update: 2022-03-14 17:15 GMT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தெப்போற்சவ விழாவில் பங்கேற்ற ஸ்ரீ விஜயேந்திரர் ஸ்வாமிகள் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும் , சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் மூன்று நாள்  தொப்போற்சவ விழா  நடைபெற்றது.

முன்னதாக காமாட்சியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் தெப்பக்குளத்தில் எழுந்தருளி காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜியேந்திர முன்னிலையில் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வருகை புரிந்தார்.

அவர்  ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற பின் காமாட்சி அம்மன் தங்க கவச உடை அணிந்த அலங்காரத்தில் சிறப்பு தரிசனம் மேற் கொண்டு சாமி தரிசனம்  செய்தார். தெப்போற்ச்வத்தில் மூன்றாவது முறை வலம் வந்தபோது  அதில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , அதிமுக சசிகலா இணைப்பு என்பது அதிமுக உள்கட்சி விவகாரம். அதில் ஒரு போதும் பாஜக தலையிடாது.மேலும் டீசல் பெட்ரோல் விலை உயரும் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து இதுவரை செயல்படுத்தினாரா என முதலில் பார்த்துவிட்டு பின்பு மற்றவர்களைப் பற்றிப் பேசலாம் என அண்ணாமலை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் பாபு ,  ஜீவானந்தம் , கூரம் விஸ்வநாதன், அதிசயம்குமார், ஜானகிராமன்,  சங்கர மட வரவேற்புக் குழு உறுப்பினர்கள் கணேஷ் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 



Tags:    

Similar News