காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு 49.99 லட்சம் பக்தர்கள் காணிக்கை

காஞ்சி காமட்சி அம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் 49 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கப் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Update: 2021-04-01 14:15 GMT

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்று காஞ்சி காமாட்சி அம்பாள் தேவஸ்தானம் இத்திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் ஸ்ரீ சங்கர மடம் பராமரித்து வருகிறது.

இத்திருக்கோயிலில் அமைக்கப்பட்ட உண்டியல்கள் இன்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா தலைமையில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ஆய்வாளர்கள் மற்றும் சங்கரமட நிர்வாகிகள் , தன்னார்வ குழு முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. ரூ 49,98,053 ரொக்கமாகவும், 292 கிராம் தங்கம், 493 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

Tags:    

Similar News