காஞ்சிபுரத்தில் இருந்து இரு மாவட்டங்களுக்கு 2950 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

காஞ்சிபுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுக்கோட்டை  மாவட்டத்திற்கு 1280 இயந்திரங்களும் , நாமக்கல் மாவட்டத்திற்கு 1670 இயந்திரங்களும் அனுப்பப்பட்டது

Update: 2024-04-03 01:45 GMT

காஞ்சிபுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து இரு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியின் போது ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு, இன்று (02.04.2024) காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு  தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பிரித்து வழங்கப்பட்டது.

நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு  தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து வழங்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுகோட்டை  மாவட்டத்திற்கு 1280 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் நாமக்கல் மாவட்டத்திற்கு 1670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பிரித்து வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொடர்பு அலுவலர்/சிறப்பு மாவட்ட அலுவலர் (நில எடுப்பு) சென்னை கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டம் இராமமூர்த்தி, காஞ்சிபுரம் தேர்தல் வட்டாட்சியர் தாண்டவம் மூர்த்தி ,  புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News