ஊருக்குள் நீர்புகுவதை தவிர்க ஏரிக்கரையை உயர்த்த, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ஆதனூரில் ஊருக்குள் நீர் புகுவதை தவிக்க ஏரிக்கரையை உயர்த வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-07-19 11:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆதனூரில் ஏரிக்கரை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டு பொதுமக்கள் கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது ஆதனூர்‌ கிராமம்.இக்கிராமத்தில் 366ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியினலால் அப்பகுதியில்  விவசாயம் நடைபெற்று வருகிறது.மேலும் பல பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.

இந்த ஏரி  பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால் பருவமழை காலங்களில் உடனடியாக நிரம்பி உபரிநீர் அனைத்தும் இங்கு உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மழை நீர்  மட்டுமல்லாது கழிவு நீரும் கலந்து அச்சமயத்தில் வருவதால், நோய்த்தொற்று மற்றும் பூச்சிகளால் அச்ச நிலை ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் குடிமராமத்து பணிகளில் இந்த ஏரியை தூர் வாராமல் ஏரிகரைகளை உயர்த்தாமல் புறக்கணித்துவிட்டனர்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு ஏரிக்கரையை உயர்த்தியும் தூர்வார பரிந்துரை செய்ய வேண்டும்  என்று பொதுமக்கள் சார்பாக திமுக ஊராட்சி செயலர் தமிழ் அமுதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தார்.

Tags:    

Similar News