காஞ்சிபுரத்தில் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா பணிகள் தீவிரம்.

Aringar Anna Birthday-காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளையொட்டி நூற்றாண்டு பூங்காக்கள் சீரமைக்கும் பணி தீவிரமடைந்ததுள்ளது.

Update: 2022-09-14 05:00 GMT

Aringar Anna Birthday

Aringar Anna Birthday-தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை ஒட்டி அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் அவரது நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தூக்கி பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரதிலுள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவ சிலைக்கு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பல நாளை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா திரு உருவ சிலைகள் அனைத்தும் புதிய வண்ணம் தீட்டப்பட்டு , அதன் சுற்றுப்பகுதியில் எனும் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News