6 ஆண்டுகளுக்கு பிறகு விளக்கொளி பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார்

6 ஆண்டுகளுக்கு பிறகு விளக்கொளி பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2021-12-08 14:30 GMT

அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி,பூதேவி தாயாருடன் வலம் வந்த விளக்கொளிப்பெருமாள்.உடன் மரகதவல்லித்தாயார் மற்றும் தேசிகன் சுவாமிகள்

திவ்ய தேசங்கள் 108  இதில் 46வது திவ்ய தேசம் காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார்.

ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் இத்திருத்தலத்தில் அவதாரம் செய்ததால் தூப்புல் வேதாந்த தேசிகன் என அழைக்கபடுகிறார். திருமங்கை ஆழ்வாரால் இரண்டு பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

லட்சுமி , ஹயக்ரீவர் , ஆண்டாள் , ஆழ்வார்கள் , கருடன் , வேதாந்த தேசிகர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

மழையின்மை காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு கனமழை காரணமாக தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் தெப்பத்திருவிழா நடைபெற்றது.

ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப்பெருமாள்,மரகதவல்லித்தாயார்,தேசிகன் சுவாமிகள் ஒன்றாக இணைந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  மைய  மண்டபத்தை 7 சுற்று வலம் வந்தனர்.

வாண வேடிக்கைகளும் நடந்தன.இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் ஆகியோர் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News