இலவச கேபிள் திட்டத்தினை விளக்கி வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம் இலவச கேபிள் திட்டத்தினை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-26 13:15 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி.சோமசுந்தரம் இன்று ஓரக்காட்பேட்டை , காவிதண்டலம் உள்ளிட்ட  கிராமங்களில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின் போது அதிகளவில் பெண்கள் இருந்ததால்  அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட தக்க திட்டமான  இலவச கேபிள் திட்டங்கள் குறித்து  விளக்கினார். மாதம் ரூ250  கட்டவில்லை என்றால் ஒளிபரப்பில்  தடை ஏற்பட்டு சீரியல்களை பார்க்க இயலாது . ஆகவே அதிமுகவிற்கு வாக்களித்தால் இலவச கேபிள் மூலம் தடையின்றி சீரியல்கள் பார்க்கலாம் என சீரியஸாக கூறி வாக்குகள் சேகரித்தார்.

Tags:    

Similar News