858 தபால் வாக்குகளை வீணடித்த அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் தங்களின் தபால் வாக்குகளை முறையாக செலுத்தாததால் 858 வாக்குகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீணானது.

Update: 2021-05-04 03:45 GMT

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டது

தபால் ஓட்டுக்களை செலுத்தும் முறை குறித்து அரசு ஊழியர்கள் , போலீசார் , ராணுவத்தினர் என பலருக்கு பயிற்சி வகுப்புகளில்  செயல்முறை விளக்கங்களும் , வீடியோ பதிவு மூலம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

இந்நிலையில் அரசு ஊழியர்கள் முறையாக தபால் வாக்கு விதிகளைப் பின்பற்றி தபால் ஓட்டு போடாததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 858 தபால் வாக்குகள் வீணாகின

உத்திரமேரூர் தொகுதியில் 442 வாக்குகளும் காஞ்சிபுரம் தொகுதியில் 385 வாக்குகளும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வாக்குகளும் அதிகாரிகளின் கையெழுத்து,  இல்லாமலும் உறுதியளிப்புசான்று இல்லாமலும் முறையாக பதிவு செய்யாததால் இவை அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு கூடுதல் முன்னிலை பெற திமுக வேட்பாளருக்கு உதவியது.

பொதுவாக படிக்காத பாமர மக்கள்தான் வாக்குகளை தவறுதலாக மாற்றி அளிக்கும் நிலையில் உள்ள நிலையில் படித்த அரசு ஊழியர்கள் கூறிய விதிகளைப் பின்பற்றி வாக்களிக்காமல் வாக்குகளை வீணாக்கியதை பார்க்கும்போது இவர்கள் எப்படி தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற பொதுவான கேள்வி எழுகிறது.

Tags:    

Similar News